ஜூன் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
“ஜூன் 1 முதலாம் திகதி தொடக்கம் பல கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மே 11ஆம் திகதி முதல் பணிக்கு அறிக்கையிடவேண்டும்.
க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண நிலை மாணவர்களுக்காக பாடசாலைகள் ஜூன் முதலாம் திகதிக்குள் திறக்க கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது” என்று சில அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் இன்று வெளியாகிய செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான அறிவிப்பை எந்தவொரு மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கோ அல்லது நிறுவனத்தின் வேறு எந்தத் தலைவருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
“நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவுவதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டவுடன் அனைத்து மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் பாடசாலைகளை மூடுவதற்கான முடிவை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தியது.
மாணவர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்ட அதே வழியில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவும் செயல்படுத்தப்படும்” என்று கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் அரசால் எடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
ஒரு நாடாக மட்டுமல்லாமல், ஒரு உலகமாகவும் அனைத்து சமூகங்களும் ஒரு முக்கியமான மற்றும் சவாலான பிரச்சினையை எதிர்கொண்டுள்ள ஒரு நேரத்தில், பகுத்தறிவற்ற மற்றும் பாரபட்சமற்ற முறையில் குறுகிய நோக்கங்களை அடைய முற்படும் சில ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு கடுமையான மறுப்பை கல்வி அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது. .