உடுவில் அம்பலவாணவர் வீதி கற்பக்குனை பகுதியில் எவரும் இல்லாத வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் விசிறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணயளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அதனால் சம்பவம் தொடர்பில் அயலவர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு 7 அரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வயோதிபத் தம்பதி வசித்து வரும் நிலையில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.