யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவரை தேடி நேற்று (08-05) இரவு 11 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தியிருப்பதாக அங்கிருந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் தினத்தன்று விபத்துச் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பிய இராணுவத்தினரை நபர் ஒருவர் தாக்கியதாகத் தெரிவித்து அந்தப் பகுதியிலும் வெவ்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இருந்தபோதிலும் தாக்குதல் நடத்தியவராகத் தெரிவிக்கப்படும் முன்னாள் போராளி ஐங்கரன் என்பவரை கைது செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.