நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11ஆவது நபரும் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய அவர், கோரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் எண்ணிக்கை ஆயிரத்து 633 பேர் (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 801 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.