மட்டக்களப்பில் 15 வயது சிறுமியொருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராஜா மேனகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சம்பவ தினமான நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்று தூக்கிட்டு கொண்ட நிலையில் தாயார் அதனை கண்டுள்ளார்.
உடனடியாக சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரியவருகிறது. குறித்த சிறுமி, தனது பாடசாலை ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என திட்டியதாகவும், அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.