பிரான்ஸில் இன்று முதல் அமுலுக்கு வரும் சில மாற்றங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!!

1 ஜூன் 2029

குளிர்கால விடுப்பு (Trêve hivernale) இன்று முதல் மேலும் 40 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


மார்ச் மாத நடுப்பகுதியில் வழமையாக முடிவுக்கு வரும் இந்த குளிர்கால விடுப்பு, மே மாத இறுதி வரை பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடுப்பு ஜூலை 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், வாடகைக்கு இருப்பவர்களை எக்காரணம் கொண்டும் வெளியேற பணிக்க முடியாது. அவர்கள் வாடகை செலுத்தவில்லை என்றபோதும் அவர்களை வெளியேற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

❤ இன்று முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது.
0.45% எனும் மிகச்சிறிய அளவில் இதன் கட்டணம் குறைக்கப்படுகின்றது. 

அதேவேளை, மின்சார கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 5.9% வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது.

❤ இன்று முதல், நில சொத்துக்களை வாடகைக்கு விடுபவர்கள் அல்லது விற்பவர்கள் தங்கள் இடங்களுக்கு அருகே 'அதிக ஒலி எழுப்பும்' இடங்கள் உள்ளதா என்பதை கட்டாயமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும். 'ஒலி மாசுப்பாடு' ஆவணம் ஒன்றை இணைத்தே அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

❤ புதிய வானங்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை இன்று முதல் வழங்கப்படும். வருமான வரி செலுத்தபடும் 18,000 யூரோக்கள் வருவாய்க்கு குறைவான ஊதியம் கொண்டவர்கள், தாம் வாங்கும் புதிய மின்சார, ஹைபிரிட், பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு புதிய விசேட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதன்படி, அவர்கள் 3,000 யூரோக்கள் வரையும், ஹைபிரிட் வானங்கள் வாங்குபவர்கள் 5,000 யூரோக்கள் வரையும் கொடுப்பனவுகள் பெற்றுக்கொள்ளலாம். இந்த கொடுப்பனவுகள் முதல் 200,000 வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Previous Post Next Post