வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
“காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பூசகர் இதே குற்றச்சாட்டில் ஏற்கனே ஒரு தடவை கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்றும் தெல்லிப்பழை பொலிஸார் குறிப்பிட்டனர்.