டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இலங்கையரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமையால் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகளின் தவறு காரணமாக இந்த சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவிருந்தது. 40 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரின் சடலமே இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. எனினும் அவர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.