யாழ்ப்பாணத்தில் விபத்து! பிரான்ஸில் வசிக்கும் நபர் உயிரிழப்பு!!

பிரான்ஸில் குடியுரிமை கொண்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

தற்போது பிரான்ஸில் வசித்து வருபவரும், நீர்வேலி வடக்கைச் சேர்ந்தவருமான முத்தையா ஞானசேகரம் (வயது-61) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.


கடந்த 19 ஆம் திகதி சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சறுக்கி விழுந்து மயக்கமடைந்திருந்தார்.

உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post