பாடசாலைகளை ஜூன் 29ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
முதல் கட்டம் ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 வரை – அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க வேண்டும்.
2 ஆவது கட்டம் ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை (5, 11 மற்றும் 13 தரங்கள்)
3 ஆவது கட்டம் ஜூலை 20 (10 மற்றும் 12 தரங்கள்)
4 ஆவது கட்டம் ஜூலை 27 (3, 4, 6,7, 8 மற்றும் 9 தரங்கள்)
தரம் 1 மற்றும் 2 எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும்.
இதேவேளை பாடசாலைகளை ஜூன் 29ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
அந்தவகையில்,
3 மற்றும் 4 தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரை
5ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரை
6, 7, 8 மற்றும் 9ஆம் தரங்களுக்கு காலை 07:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:30 மணிவரை
10, 11, 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு காலை 7:30 முதல் மாலை 3:30 மணி வரை நடைபெறும்.
இந் நிலையில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்ரெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதிவரையும் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரெம்பர் 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே நடத்த முடியும்.
இதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டு பரீட்சைகளும் செப்ரெம்பர் வரை ஒத்திவைக்கப்பபட்டுள்ளது.