பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா இன்றைய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு பக்கதர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
இவ்வாறு குவிந்துள்ள பக்தர்கள் எவரும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கவில்லை என்றும், இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய தரிசனத்திற்கு பக்தர்கள் 50 பேர் வரையே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகளவில் கூடியிருந்த பக்தர்கள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக அனுமதிக்கப்பட்ட 50 பேரும் தரிசனம் முடித்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததையடுத்து ஏனையோர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் அப் பகுதியில் சிறு குழப்பம் ஏற்பட்டதுடன், பொலிஸாருடன் பக்தர்கள் முரண்பட்டதைக் காணக் கூடியதாகவிருந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50 பேர் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள முடியுமென ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தாலும், ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே திருவிழா நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.