யாழ்ப்பாணம்- கிளிநொச்சி பூநகரி வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த விபத்து 4ஆம் கட்டை பகுதியில்இ இராணுவ முகாமின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றவரை டிப்பர் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்து டிப்பரை அகற்ற முயன்றபோது, பொதுமக்கள் அங்கு குவிந்ததுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சமயத்தில், பொதுமக்களை சமூக இடைவெளி பேண இராணுவத்தினர் வலியுறுத்திய நிலையில், பிரதேசவாசியொருவர் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 250 இற்கும் அதிகமான மக்கள் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.