யாழில் மாவை சேனாதிராஜா பங்குபற்றும் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நிறுவனம் மீது தாக்குதல்!(படங்கள்)

யாழ்ப்பாணம் தென்மராட்ச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத எண்மர் அடங்கிய குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சம்பவத்தில் அங்கிருந்த ஒருவர் காயம் அடைந்ததாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு 11.45 மணியளவில் மோட்டர் சைக்கிள்களில் வந்த குழுவினர் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்து உடைத்ததுடன் தொலைபேசி உட்பட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து செயற்படும் சில இணைய ஊடகங்களுக்காக செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தாம் தயாரித்து வழங்குவதாகவும் இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனா்.



Previous Post Next Post