சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியது. அதன் போது ஒருவர், பிறிதொருவரை கத்தியால் குத்த முனைந்த போது, அங்கிருந்த சிறுமியின் கழுத்து பகுதியில் கத்தி குத்தியுள்ளது.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, சாவகச்சேரி வைத்திய சாலையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.