வாடிக்கையாளர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தும்போது இறுதி மாத மின் கட்டணப் பட்டியல் சரியானது என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாவனையாளர்கள் நுகரும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இறுதிமாத மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்ட மின்சார கட்டணங்களில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார். இலங்கை மின்சார சபையின் (சி.இ.பி.) கருத்துப்படி, மின்சார பாவனையாளர்களுக்கு சரியான மின் பட்டியல் கடைசியாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத மின் பட்டியலைவிட ஒரு நபர் அதிக கட்டணத்தைக் கொண்ட மின் பட்டியல் பெற்றால், அதனை தவணைகள் அடிப்படையில் செலுத்த முடியும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹெரத் தெரிவித்தார். மின்சார கட்டணத்தை தவணைகளில் செலுத்தப்பட்டாலும், எந்த வீட்டிலும் மின்வெட்டு ஏற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோயால் பலர் வீடுகளில் இருந்த நிலையில் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அடுத்த மாதங்களில் உள்நாட்டு மின்சாரம் நுகர்வு அதிகரித்துள்ளது என்று மின்சார சபை கருதுகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் 30 சலுகை அலகுகள் குறைக்கப்படவில்லை. இரண்டு மாத மின் பட்டியலில் 60 அலகுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.