யாழில் அநியாயமாகப் பறிபோகும் இளைஞர், யுவதிகளின் உயிர்கள்! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளின் அகால மரணங்கள் எமது தமிழ் சமூகத்துக்குப் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, விபத்துக்களாலும், தற்கொலைகளாலும் இனத்தின் எதிர்கால சந்ததியினரின் உயிர்கள் பிரித்தெடுக்கப்படுவது தமிழினத்துக்கான எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அந்தவகையில் இன்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் உயிர்கள் பறிபோயுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தராகப் பணியாற்றுபவரும் அவரின் நண்பருமென இவ்விருவர்களின் உயிர்கள் பிரிந்ததென்பது அவர்களின் குடும்பங்களின் சோகம் என்பதற்கப்பால் இந்த தமிழ் இனத்தின் இளம் உயிர்கள் பிரிந்ததென்பதே பெரும் துயரம்.

எனவே இவ்வாறான உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு, இளையோர் மத்தியில் சரியான விழிப்புணர்வுகள் தேவை என்பதை இத் துயரம் பறைசாற்றியுள்ளது.

அத்துடன், விபத்துக்கள் மற்றும் தற்கொலைகளுக்கு, இன்றைய இளைஞர்களின் தான்தோன்றித்தனமான போக்கு, பெரியோர்களை மதிக்காததன்மை, இளவயதில் முதிர்ச்சியடைந்த போக்கு என்பனவும் ஒரு காரணமாக அமையும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

எனவே எமதருமை இளம் சமுதாயமே! எமது இனத்தின் எதிர்காலத்தின் தேவைக்காக, சேவைக்காக உங்களின் உயிர்கள் எங்களுக்குத் தேவை என்பதை உங்கள் மனதில் நினைத்து, இவ்வாறான உயிரிழப்புக்களை முடிந்தவரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவ்விடத்தில் எம்மால் விடுக்கப்படும் கோரிக்கையாகவுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மட்டுமல்லாது தமிழர் பகுதிகளில் இளைஞர், யுவதிகளின் மத்தியில் அகால மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெயமூர்த்தி நிஷாந்த்
ஜானுசன் 



Previous Post Next Post