எவ்வித முன் அறிவுப்புகளும் இன்றி, அனுமதியும் இன்று ProjetX எனும் இந்த நிகழ்வை சில இளைஞர்கள் இன்றிணைத்தார்கள். சமூக வலைத்தளங்களிலுன் உதவியுடன் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து இந்த நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
Esplanade des Invalides பகுதியில் குவிந்த சில இளைஞர்கள் பாரிய அளவிளான ஒலி பெருக்கிகளை அமைத்ததோடு, பாடல்களையும் ஒலிக்க விட்டனர். சில நிமிடங்களுக்குள்ளாக விரைந்து வந்த காவல்துறையினர், உடனடியாக அவர்களை கலைந்து போகும் படி அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் `இசை நிகழ்ச்சியை` தொடர ஆரம்பித்துள்ளனர். நள்ளிரவு 1:30 மணிக்கு காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி இளைஞர்களை கலைக்க ஆரம்பித்தனர்.
அவர்களில் சில கண்ணாடி குடுவைகள், போத்தல்களை காவல்துறையினர் மீது வீசினர். அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
கடந்தவார சனிக்கிழமை பாரிஸ் உட்பட பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய 'இசை திருவிழாவுக்கு' (fête de la musique) அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இவ்வார சனிக்கிழமையும் அதே முனைப்புடன் இளைஞர்கள் வீதியில் இறங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.