யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகன விபத்தில் உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக் கூட்ட நிகழ்வு இன்று மாநகர தீயணைப்புப் படைப் பிரிவில் அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெற்றன.