நாளை ஜூன் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.