யாழ்.கொடிகாமத்தில் விபத்து! இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

கொடிகாமத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளாகியதில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இயக்கச்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே விபத்தில் சிக்கினர். ஒரு இளைஞனின் உடலில் உயிர் இருப்பதாக கருதி அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.



கண்ணதாசன் கஜீவன் (18) என்பவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றையவரின் சடலம் விபத்து நடந்த இடத்தில் உள்ளது.



Previous Post Next Post