வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் உயர் திருவிழா தெப்பத்திருவிழாவுடன் நிறைவுறும்.
ஆண்டுதோறும் பல லட்சம் அடியார்கள் இலங்கையின் பலபகுதிகளில் இருந்துமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவார்கள்.
எனினும் இம்முறை கோவிட் – 19 நோய்க் கட்டுப்பாடுகளையடுத்து நயினாதீவு மக்களில் 100 பேர் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கொடியேற்றத்தில் ஆலய சிவச்சாரியர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.