ரயிலில் பாய்ந்த இளம் தம்பதி! மனைவி உயிரிழப்பு!! கணவன் படுகாயம்!!!

பதுளையில் ரயிலில் பாய்ந்து இளம் தம்பதி தற்கொலை செய்துக் கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை ஹாலிஎல ரயில் நிலையம் மற்றும் பதுளை ரயில் நிலையத்திற்கு இடையிலான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ரயில் பாய்ந்த இருவரில் பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த கணவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இராணுவ சிப்பாயான 21 வயதான லக்ஷான் தனஞ்சய என்பவரே படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் திடீரென ரயிலில் பாய்ந்ததாக ரயில் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post