பிரான்சில் மருத்துவ பரமாரிப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பெண் செவிலியர் ஒருவரை பொலிசார் அவரின் தலைமுடியை இழுத்து கைது செய்த வீடியோ வெளியாகி அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மருத்துவ பராமரிப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது Farida என்ற 52 வயது மதிக்கத்தக்க பெண் செவிலியரை பொலிசார் கைது செய்தனர்.அப்போது, அவரின் தலை முடியை இழுத்து, அதன் பின் ஒரு தர தரவென இழுத்து, அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பொலிசார் பிடிக்கும் போது, அவர் தான் ஒரு செவிலியர், எனக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று கெஞ்சுகிறார். இருப்பினும் பொலிசார் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் மீது எறிபொருள் எறிந்த குற்றம் காரணமாக, அவர் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் குறித்து Farida-வின் மகள் Imen Mellaz தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவர் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை என 3 மாதங்கள் வேலை செய்தார். இன்று, அவள் சம்பளம் உயர்த்தப்படுவதற்கும், அவளுடைய வேலை அங்கீகரிக்கப்படுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்தாள். அவளுக்கு ஆஸ்துமா இருக்கிறது. இது போன்ற ஒரு கைது நடவடிக்கையை எங்கும் நியாயப்படுத்த முடியாது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, தற்போது அது வைரலாகி வருகிறது.