யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரக அதிகாரி உட்பட்ட இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இணுவிலில் தங்கியிருந்து இந்தியா சென்றிருந்தவேளை கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ள இந்தியப் புடைவை வியாபாரி மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்த புடைவை வியாபாரி ஆகியோருடன் சம்பந்தப்பட்டிருந்த இருவரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தூதரக அதிகாரி அண்மையில் இந்தியாசென்றிருந்த நபரின் பயண ஏற்பாடுகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய புடைவை வியாபாரியின் மரணச் சான்றிதழ் உறுதிப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததன் அடிப்படையிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்ற பேருந்து சாரதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.