யாழ்.நல்லூரில் பாரதியார் சிலைக்கு வந்த சோதனை! (படங்கள்)

யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் விரக்தியை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை என்ற போதும் அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகள் அவை மற்றவர்களை கவரும்படி இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களுக்கு மன விரக்தியை உண்டாக்கும் வகையில் அமைய கூடாது.


அவ்வாறு விரக்தியை உண்டாக்கும் வகையில் நல்லுார் ஆலய சுற்றாடலில் பாரதியார் சிலை மீது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபயவின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தேர்தல் சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சுவரொட்டிகள்மட்டும் அகற்றப்படாமல் உள்ளன.

முதலில் இவ்வாறான சுவரொட்டிகளே அகற்றப்படவேண்டும் என பொதுமக்கள் பலரும் கடுமையான விசனம் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post