கனடாவில் உள்ளாடையுடன் மாணவியை இழுத்துச் செல்லும் பொலிஸ்! (அதிர வைக்கும் வீடியோ)

உளப்பிறழ்ச்சிக் குறைப்பாடுகள் கொண்டோரை பொலிசார் குற்றவாளிகள் போல நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகின்றன. இவர்களை மன நல பாதிப்பு கொண்டோர் என அழைப்பது ஒருவேளை அவர்களது ஆளுமையை தவறாக சித்தரிக்கலாம்.

சமீபத்தில் மனோரீதியான பிரச்சினை கொண்ட முதியவர் ஒருவரின் நலன் குறித்து அவரது மகள் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுக்க, கடைசியில் அவர் பொலிசாரால் கோரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

பிரித்தானியாவில் அரச குடும்பமே இந்த மன நல பிரச்சினைகள் கொண்டோருக்காகத்தான் சேவை செய்து வருகிறார்கள்.


இந்நிலையில், கனடாவில் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரை பெண் பொலிசார் ஒருவர் மிக மோசமாக நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கெலோனாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியர் பயிற்சி பெறுபவர் Mona Wang. உளப்பிறட்சி பிரச்சினை கொண்ட Mona வுக்கு உதவி தேவை என அவரது ஆண் நண்பர் பொலிசாரை அழைத்துள்ளார்.

ஆனால் உதவிக்காக வந்த Cpl. Lacy Browning என்னும் பெண் பொலிசாரோ, தன்னை தாக்கியதாகவும் அவமதித்ததாகவும் புகாரளித்திருந்தார் Mona.
ஆனால், தான் சென்று பார்க்கும்போது, Mona குளியலறையில் விழுந்துகிடந்ததாகவும், அவர் அருகே மாத்திரை போத்தல்களும், ஒயின் போத்தல் ஒன்றும் கிடந்ததாகவும், அவர் கையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும், தான் Mona வை தான் வெறுங்கையால்தான் தாக்கியதாகவும், அதுவும் அவருக்கு விலங்கிடுவதற்காகத்தான் என்றும் கூறியிருந்தார் Lacy.

ஆனால், தான் பாதி நினைவுடன் குளியலறையில் கிடந்தபோது Lacy தன்னை வயிற்றில் மிதித்ததாகவும், தன் கையில் ஏறி நின்றதாகவும் தெரிவித்தார் Mona.

எனவே, அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த  CCTV கமெராக்களில் பதிவான காட்சிகளை சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வீடியோவில் சரியான நினைவின்றி கிடக்கும் Mona வை அந்த பெண் பொலிசார் வழி முழுவதிலும் தரதரவென கையைப் பிடித்து இழுத்துவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.


மேலாடை அணியாமல், வெறும் உள்ளாடை மற்றும் பேண்ட் மட்டும் அணிந்திருக்கும் Mona வை, கட்டிடத்தின் முன் பக்கத்திற்கு இழுத்துவரும்  Lacy என்னும் அந்த பெண் பொலிசார், ஒரு கட்டத்தில் கீழே கிடந்த Mona மெதுவாக தலையை உயர்த்த, காலால் அவரது தலையை மிதித்து தள்ளும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

பின்னர்,  Mona வின் தலை முடியையும் தோளையும் பிடித்து தூக்கும் அந்த பெண் பொலிசார், அவரை ஒரு அறைக்குள் இழுத்துச் செல்கிறார். வீடியோ காட்சிகளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பெண் பொலிசாரான  Lacy யை நிர்வாக பொறுப்புகள் துறைக்கு பணிமாற்றம் செய்துள்ளதோடு, துறை ரீதியான விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் தங்கள் விசாரணை முடிந்ததும் பொலிஸ் துறை தனிப்பட்ட முறையில்  Lacy  மீது கிரிமினல் விசாரணை மேற்கொள்ளவும் கனேடிய பொலிஸ் துறை உத்தரவிட்டுள்ளது.
Previous Post Next Post