பிரான்ஸில் RER B ரயில் தடம்புரண்டதால் பாரிய போக்குவரத்துத் தடை! (படங்கள்)

பிரான்ஸில் RER B தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது. இதனால் பாரிய போக்குவரத்துத் தடையை சந்திக்க நேரிரும் என RATP அறிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடா்பில் தெரிய வருவதாவது,

நேற்று  RER B தொடருந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை. நேற்று புதன்கிழமை மாலை 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றது.

இது தொடர்பாக RATP தெரிவிக்கையில், Denfert-Rochereau நிலையத்தில் இருந்து தொடருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்துக்குள் சிக்கியது. RER B தொடருந்தின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.  அதைத் தொடர்ந்து Laplace மற்றும் Port Royal நிலையங்களுக்கிடையே போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.



அதேவேளை, Gare de Nord தொடருந்து நிலையத்துக்கான 'உள்ளக தொடர்பும்' (L’interconnexion) பகுதியும் தடைப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து RER B சேவை இன்று வியாழக்கிழமை பாரிய போக்குவரத்து தடையை சந்திக்க நேரிடும் என RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் வரையான மக்கள் இதில் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post