குறுகிய கால விசாவில் (Schengen Visa) பிரான்ஸ் வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

குறுகிய கால ஷெங்கன் வீஸாவில் (Schengen Visa) பிரான்ஸுக்கு வருகை தந்தவர்கள் கொரோனோ நெருக்கடி காரணமாக திரும்பிச் செல்ல முடியாத நிலைமை இருப்பின் அவர்கள் தொடர்ந்து நாட்டில் தங்கி இருக்க அனுமதிக்கப்படுவர்.

அவர்களது வீஸா காலாவதியானாலும் அந்த திகதியில் இருந்து மேலும் 90 நாட்கள் நாட்டில் தங்கியிருக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.


ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரெஞ்சு தூதரகங்களின் இணையத்தளங்களில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் ஷெங்கன் எல்லைகள் மூடப்பட்டன. அதற்கு முன்பாக பிரான்ஸ் நாட்டுக்கு வீஸா பெற்று எல்லைகளுக்குள் நுழைந்தவர்களுக்கே இந்த தற்காலிக வீஸா நீடிப்பு வழங்கப்படுகிறது.


வீஸா பாவனைக்காலம் மார்ச் 15,முதல் மே 15 வரையான காலப்பகுதிக்குள் முடிவடைபவர்கள் அத்திகதியில் இருந்து 90 நாட்கள் நாட்டில் தங்கி இருப்பதற்கான தற்காலிக நீடிப்பை பெறுகின்றனர்.

உலகளாவிய வைரஸ் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் உள்ள பிரெஞ்சுத் தூதரகங்களில் வீஸா வழங்கும் பணிகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வீஸா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளும் இதில் அடங்கும்.
Previous Post Next Post