
இந்நிலையில் நேற்றயதினம் இரவு வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டின் முதலாம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் மெனிக்பாம், பகுதியை சேர்ந்த மோகன் சிவகுமார் வயது 35 என்ற நபரே சாவடைந்துள்ளார். சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

