
கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாகவும், கொரோனாச் சோதனைகள் முறையாகப் பின்பற்றப்படாததுமான 16 நாடுகளைப் பிரான்சின் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் பட்டியலிட்டுள்ளார்.
இந்த நாடுகளில் இருந்த கொரோனாத் தொற்று பிரான்சிற்குள் பரவாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்க்பபட்டுள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கு விமான நிலையத்தில் வைத்துக் கொரோனாச் சோதனை செய்யப்படும் எனவும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல், அல்ஜீரியா, துருக்கி, தென்னாபிரிக்கா, பிரேசில், சிலி, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, மெக்சிக்கோ, சேர்பியா, கட்டார், மொன்டநேக்ரோ, பனாமா, பெரு, குவைத்.