
இதன் காரணமாகப் பல பிராந்தியங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
இதனடிப்டையில் பல கடற்கரைகள் பொதுமக்களிற்குத் தடை செய்யப்பட உள்ளன. இதனடிப்படையில் Morbihan இலுள்ள முக்கிய கடற்கரையான Quiberon கடற்கரைகள், இரவு 21 மணியிலிருந்து காலை 7 மணிவரை முடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இங்குள்ள அருந்தகங்களும் (Bar) மேற்குறிப்பிட்ட நேரத்தில் மூடப்பவேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளன.
இங்கு தற்போது கொரானாத் தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 25 வயதிற்குப்பட்டவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.
