உட்கட்சி மோதலால் அதிர்கிறது கூட்டமைப்பு! கலையரசனின் தேசியப் பட்டியல் நியமனம் நிறுத்தம்!!


தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை- நாவிதன்வெளி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.கலையரசனுக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த முடிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் ஆசனத்தினை கலையரசனுக்கு வழங்கும் தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தாமதப்படுத்துமாறு கட்சியின் செயலாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினால் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
Previous Post Next Post