பிரான்ஸில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்! சமூகவலைத்தளத்தில் பரவும் காணொளி!!

காவல்துறை அதிகாரிகள் இருவர் தாக்கப்படும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. உந்துருளி சாகசம் மேற்கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் ஒருவர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட ஏழு பேர் காவல்துறைனரை மிக மோசமாக தாக்கினர்.

தாக்குதலுக்கு இலக்கான இரு இருவரும் பரிசைச் சேந்த la Division régionale motocycliste அதிகாரிகளாவார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Porte de Clignancourt பகுதியில் இடம்பெற்றுள்ளது.


தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் காவல்துறையினரின் கண்ணீர் புகை குடுவையை திருடி, அதை காவல்துறையினர் மீது பாய்ச்சி அடித்தனர்.

இச்சம்பவம் அனைத்தையும் அருகில் நின்ற பலர் காணொளிகளாக படமாக்கினர். இணையத்தில் பகிர்ந்துள்ள இந்த காணொளி பல ஆயிரம் பார்வைகளை பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post