வாக்களிப்பு நிறைவு; தமிழர் தாயகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!


நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 5 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 16 263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களிலும், 12,985 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. பிற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த தேர்தலில், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு. கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு ஓரளவு அதிகரித்துக் காணப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், எத்தனை வீதமான வாக்களிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரைவான நிலவரப்படி 64.02 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 345 வாக்காளர் உள்ள நிலையில் பிற்பகல் 2.30 மணிவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 435 பேர் வாக்களித்துள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதில் அதிகப்படியாக ஊர்காவற்றுறை, நல்லூர் மானிப்பாய், கோப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை தொகுதிகளில் அதிகளவான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தொகுதி ரீதியாக வாக்களிப்பு வீதம்:
  • ஊர்காவற்றுறை - 72.33%
  • வட்டுக்கோட்டை - 67.03%
  • காங்கேசன்துறை  - 47.00 %
  • மானிப்பாய்  - 65.62 %
  • கோப்பாய்  - 64.05%
  • உடுப்பிட்டி - 62.14 %
  • பருத்தித்துறை  -67.28 %
  • சாவகச்சேரி - 64.71 %
  • நல்லூர் - 69.17 %
  • யாழ்ப்பாணம் - 72.76%
நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு வீதம்:
  • இரத்தினபுரி 70%,
  • வன்னி 70%,
  • திருகோணமலை 69%,
  • மட்டக்களப்பு 69%,
  • மாத்தளை 68%,
  • திகாமடுல்ல 68%,
  • கேகாலை 67%,
  • கண்டி 65%,
  • மொனராகலை 65%,
  • மாத்தறை 65%,
  • கம்பஹா 62%,
  • ஹம்பாந்தோட்டை 62%,
  • கொழும்பு 60%,
  • களுத்துறை 60%,
  • காலி 60%,
  • புத்தளம் 60%,
  • யாழ்ப்பாணம் 57%,
  • பொலன்னறுவை 55%
  • அநுராதபுரம் 52%
Previous Post Next Post