யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட சாவகச்சேரி நகரசபை தவிசாளரின் கணவரின் வாக்கினை கள்ளமாக வேறு யாரோ பதிவு செய்ததால் சாவகச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார்.
அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.