பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்றினால் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துள்ளது. தேசிய உள்ளிருப்பு பற்றிய பேச்சுக்களும் அரச மட்டத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.
நேற்று லில் நகரத்திற்குச் சென்றிருந்த பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ், "மக்களும், அரசாங்கமும் தங்கள் அவதானிப்பைக் கைவிட்டு விடக்கூடாது. இதன் மூலம் மட்டுமே நாம் மீண்டும் ஒரு தேசிய உள்ளிருப்தை தவிர்க்க முடியும்.
அவதானம் மற்றும் சுய பாதகாப்புத் தவறினால், நாடு மீண்டும் ஒரு உள்ளிருப்பிற்குள் செல்லவேண்டி இருக்கும். வைரஸ் ஒன்றும் விடுமுறையில் சென்று விடவில்லை. நம்மிடையே மிக வேகமாகப் பரவி வருகின்றது.
இதிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொண்டு, பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வியலை நாம் முன்னெடுக்க வேண்டும். முக்கக்சவம் அணிந்து, பாதுகாப்பு இடைவெளிகளை உறுதிப்படுத்துங்கள். இதையே நான் அரசாங்கத்திற்கும், அரச நிர்வாகங்களிற்கும் எச்சரிக்கின்றேன்" என ஊடகவியலாளர்களிற்குத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு உள்ளிருப்பு வராது தடுக்க வேண்டும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு வந்துள்ளமை தெளிவாகத் தெரிய வந்துள்ளது.