யாழில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வந்த சுமந்திரனுக்கு எதிர்ப்பு! அதிரடிப்படை தாக்குதல்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களும் அங்கு கூடியி்ருந்தவர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் சிறப்பு அதிரப்படையினர் தடிஅடி நடத்தினர்.

அதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியிலும் சுமந்திரன் சுமார் 15 நிமிடங்களில் கடும் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு அதிகாலை 1.40 மணியளவில் கடும் பாதுகாப்புடன் வருகை தந்தார்.


இந்தச் சம்பவங்களின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் மீது பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் தாக்குதலை மேற்கொண்டனர். அதனால் அவர் படுகாயமடைந்தார்.

அத்தோடு வேடிக்கை பார்த்த, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அதிரடிப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

இனி எல்லாமும் மாறும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் சிவில் அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்டனர்.



Previous Post Next Post