மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 24.08.2020 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆம்பமாகின்றது.
தொடர்ந்து பத்துத் தினங்கள் இடம்பெறும் குறித்த திருவிழாவில் 31.08.2020 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் மறுநாள் 01.09.2020 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழாவும் நடைபெறும்.
அத்துடன் 02.09.2020 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு இடம்பெறும் கொடியிறக்கத்துடன் சித்திவிநாயகப் பெருமானின் இவ் வருடத்துக்கான திருவிழா இனிதே நிறைவுபெறும் என ஆலய தர்மகர்த்தாக்கள் அறிவித்துள்ளனர்.