குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியின்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை.
தமிழரசு கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் என கூறுவது பொருத்தமற்றது.
தமிழரசு கட்சியில் இளம் இரத்தம் பாச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமை பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
அனைத்து உறுப்பினர்களும், மக்களும் இணைந்து ஒருமித்து கோரினால் அந்த தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி இன்னொருவரது பதவியை பறித்து அதில் அமர வே்ணடும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.