காதல் விவகாரம்! கட்டடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற 15 வயதுச் சிறுமி!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வவுனியா வைத்தியசாலைக் கட்டடத்தின் மீது ஏறி கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்த சிறுமியால் நேற்று அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையின் 02 ஆம் மாடிக் கட்டடத்தின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.


இந் நிலையில் வைத்தியசாலை ஊழியர்கள் மாடிக் கட்டடத்தின் மீது ஏறி குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

தனது காதல் விவகாரத்தினாலேயே இவ்வாறு குதித்துத் தற்கொலை செய்யப்போவதாக அவர் தெரிவித்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post