எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 10, 2020 வியாழக்கிழமை
பிரான்ஸ் மருத்துவமனைகளில் 19பேர் மரணம்
9,843 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை....
மொத்த இறப்புக்கள் 30,813
மொத்த தொற்றுக்கள் 353,944
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,475
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,338 (24 மணி நேரத்தில் +19) ஆகும்.
5096 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 615 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசை பெற்று வருகின்றனர். சோதனை நேர்மறை விகிதம் 5.2%.
பிரான்சில் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பில், அரசாங்கம் எட்டு முதல் பத்து நாட்களுக்குள் "பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்" என்று செப்டம்பர் 9 புதன்கிழமை விஞ்ஞான கவுன்சிலின் தலைவர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.