யாழில் இளம் பெண் திடீர் கைது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹேரோயினை விற்பனை செய்யும் நோக்குடன் உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சந்தே நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.

Previous Post Next Post