கியூடெக் - கரித்தாஸ் நிறுவனத்தால் யாழ்.ஊடகவியலாளர்களுக்குக் கருத்தமர்வு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கியூடெக் கரித்தாஸ் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கான கருத்தமர்வு யாழ். கியூடெக் கரித்தாஸ் மண்டபத்தில் அருட்பணி இயூஜின் பிரான்சிஸ் அடிகள் தலமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் “சமயங்களுக்கிடையிலான மற்றும் சமூகங்களுக்கிடையிலான சமாதான நல்லுறவு வலுவூட்டலில் ஊடகவியலாளரின் பங்கு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் நிலாந்தன் உரையாற்றும் போது, 

நல்லிணக்கம் யாரோடு யார் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்காது, நல்லினக்கத்ததை அடைய முடியாது. முரண்பட்ட மனிதர்கள், குடும்பங்கள், சமூகங்கள், இனங்களிடத்தில் நல்லினக்கம் ஏற்படுவதில் உள்ள ஆர்வம், அதனை முன்னெடுப்பதில் முரண்பாடட்ட இனம் காணப்படல் மிக முக்கியமானது, சமநிலைத்தன்மையுடன் முன்னெடுப்பதாலே தான் இவை சாத்தியமாகும் என்பதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தலே நல்லிணக்க இலக்கை அடைய வழியாகும்.

இதற்கு தடையாக பலமுனைதாக்கங்கள் ஏற்படலாம் அதில் ஒன்றுதான் ஊடகங்களாகும் ஊடகவியலாளர்கள் விழிப்புடன் சமூகத்தை வழிப்படுத்தும் பொறுப்பு மிக்கவர்வர்கள் என்ற மனநிலையுடன் விமர்சனமாக சிந்திப்பவராகவும், தேடல்மிக்கவராகவும் தம்மை தயார்படுத்துவதில் தான் சிறந்த ஊடகப் பணிகளை ஆற்றமுடியும். “மாற்றத்தின் முகவர்களே ஊடகவியலாளர்கள” என்ற மனப்பாங்குடன் சமூகத்தை மாற்றத்தின் நிலைக்கு ஏற்ப சமூக வலைத்தளங்களை திசைமாற்றி செல்லாது அறிவுசாந்த, நல்லிணக்கம் சாhந்த நிலையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு சிறந்த ஊடகவியலாளருக்கே உண்டு என்பதை வெளிப்படுத்தும் மாற்றத்தின் முகவர்களே ஊடகவியலாளர் தம்மை உருவாகி உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.

இதேவேளை கியூடெக் - கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் உரையாற்றகையில், மக்களை வழிகாட்டும் ஊடகங்கள் தம் பொறுப்புக்களை உணர்ந்து சர்வமத நல்லுறவை வலுப்படுத்தும் நல்லிணக்க சிந்தனைகள் வலுவூட்டும் வழிகளில் செயல்படவே ஊடகவியலாளருடனான சந்திப்புக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருக்கின்றோம். ஊடகத்துறையில் முன்னேற பல்கலைக்கழகத்தில் கற்று வரும் புதிய தலைமுறையினருக்கு இக்கருத்தமர்வு மிகமுக்கிய வழிகாட்டலாய் அமையும். இதுபோன்று தேடல் உள்ளவர்கள் தான் மாற்றத்தின் முகவர்களாக மாற வேண்டும் என்றார். 

இக் கருத்தமர்வில் கலந்து கொண்ட முன்னாள் கல்விப்பணிப்பாளர் வல்வை அனந்தராஜா கருத்துக் கூறுகையில் அறிவு சார்ந்த தேடலுடன் வாசிப்பு பழக்கங்களை தூண்டினால், துலங்கலாம் என்பதை நூல்களை வாங்குவது மட்டுமல்ல அவைபற்றி விமர்சித்து கலந்துரையாடுவதும் சுமூகத்துடன் உறவாடி உண்மை நிலைகளை வெளிப்படுத்துவதிலும் ஊடகவியலாளரின் பார்வைகள் தேடலுடனானதாக நடுநிலையாளராக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும் முகவர்களாக ஊடகவியலில் மிளிர வேண்டும் என்றார்.















Previous Post Next Post