துண்டாடப்பட்ட கையைப் பொருத்தி சாதனை படைத்தது யாழ்.போதனா வைத்தியசாலை!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திரச்சிகுச்சையின் ஊடாக அவரது கை காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த சத்திரச்சிகிச்சைக்கு யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கினர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கை துண்டாடப்பட்டவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவர் த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரச்சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்தச் சத்திரச்சிகிச்சை வெற்றியளித்ததன் காரணமாக கிளிநொச்சி வாசியின் துண்டாடப்பட்ட கை நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சில மாதங்களின் பின்னர் அவரது கைது பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் கைகள்,கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும். வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும்.

இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் – என்றார்.

Previous Post Next Post