பிரான்ஸ்-பரிசில் பயங்கரவாதத் தாக்குதல்! தாக்குதலாளிகள் தப்பியோட்டம்!!




எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரஸ் நகரின் 11ஆம் வட்டகையில் நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதல் ஒன்றில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரபல கேலிச் சித்திரப் பத்திரிகையான சார்ளி ஹெப்டோவின் (Charlie Hebdo) முன்னாள் ஆசிரிய பீட அலுவலகம் அமைந்திருந்த கட்டடம் அருகிலேயே இன்று பகல் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

வீதியில் வைத்து நால்வரை வெட்டிக் காயப்படுத்தியவர்கள் எனக்கூறப்படும் தாக்குதலாளிகள் இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடைபெற்றிருக்கும் Richard Lenoir பகுதியை பொலீஸார் சுற்றுவளைத்திருக்கின்றனர். அந்தப்பகுதிக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலீஸ் தலைமையகம் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளது.

ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் தாக்குதலாளிகள் தப்பிச் சென்றிருப்பதை அடுத்து சம்பவம் நடந்த பகுதியில் பாடசாலைகள் சில மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு பதற்றம் நிலவுகிறது.
2015 ஜனவரி 7ஆம் திகதி நகரில் உள்ள அந்த 'சார்ளி ஹெப்டோ' ஆசிரிய பீட அலுவலகத்துக்குள் முஸ்லிம் சகோதரர்கள் இருவர் ஆயுதங்களுடன் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் புகழ்பெற்ற அதன் பிரதம ஆசிரியரும் கேலிச் சித்திர ஓவியர்களும் உட்பட பன்னிரெண்டு பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் அதன் அலுவலகம் பிறிதோர் இடத்துக்கு மாற்றப்பட்டது.
இத்தாக்குதல் தொடர்பான நீதி விசாரணைகள் கடந்த பல நாட்களாக பாரிஸ் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் நடைபெற்றுவருகிறது. தாக்குதலுக்கு காரணமாக அமைந்த முகமது நபி சம்பந்தப்பட்ட கேலிச் சித்திரங்களை அப் பத்திரிகை அண்மையில் மீளப் பிரசுரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post