யாழில் வீடு புகுந்த கும்பல் அட்டூழியம்! இரு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீயிட்டு எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

சுண்டுக்குளி குருசர் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அட்டூழியம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு வீட்டின் வாயில் கதவு வாள்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் யன்னல் கண்ணாடிகளும் அடித்து வீட்டின் உடைக்கப்பட்டுள்ளன.


வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்த விலை இனந்தெரியாத கும்பல் ஒன்று இந்த அட்டூழியத்தை அரங்கேற்றித் தப்பித்துள்ளது.

சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Previous Post Next Post