பிரான்ஸில் இன்று ஒரே நாளில் 1,733 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாடசாலை மாணவர்களுக்கு இடையே கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,733 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேவேளை இன்று 440 ஆசியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததன் பின்னர் இதுவரை 8,223 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 3,000 மாணவர்கள் இந்த ஒரு வாரத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர்.

இந்த 8,223 மாணவர்களோடு 2,063 ஆசியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதன்படி தற்போது 293 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. 27 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
Previous Post Next Post