இரவோடு இரவாக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட 21 கொரோனா நோயாளிகள்!


 
யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடயைச் சேர்ந்தவர்கள் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று கண்டறியப்பட்டது.

அவர்கள் 21 பேரும் யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டனர்.

மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 50 பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியசாலை அமைப்பதற்கு அப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் இவ் வைத்தியசாலை நேற்றுத் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post