எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 63 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை புதிய எல்லையான 32,000 ஐ கடந்தது.
பிரான்சில் நேற்றைய தினம் 12,845 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், இன்று 13,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளை, இவ்வார செவ்வாய்க்கிழமையில் இருந்து தொற்று வீதம் 7.6% எனும் வீதத்திலேயே உள்ளது.
இன்று பதிவான 63 சாவுகளுடன் மொத்தமாக இதுவரை 32,019 பேர் சாவடைந்துள்ளனர்.
3,998 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, 844 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.