28 வருடங்களின் பின் இலங்கைத் தமிழரை நாடு கடத்த சுவிஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் 28 ஆண்டுகள் சுவிஸர்லாந்தில் வசித்து வந்த நிலையில், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது குடும்பத்தினர் சுவிஸர்லாந்து வந்ததுடன் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

பெற்றோர் மற்றும் அவர்களின் நான்கு பிள்ளைகள் சார்பில் விண்ணப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் அவர்கள் சுவிஸில் தற்காலிமாக தங்கியிருக்க குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது.

இவர்கள் சுவிஸில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தற்போது 60 வயதான இந்த குடும்பத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

லுட்சேர்ன் மாநில குடியேற்ற அலுவலகத்தின் தீர்மானமே இதற்கு காரணம், இவர் தனது வதிவிட அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மாரச் மாதம் விண்ணப்பித்துள்ளார், எனினும் அதிகாரிகள் அதனை புதுப்பிக்க மறுத்துள்ளனர்.

முதலில் லுட்சேர்ன் மாநில நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பன அதிகாரிகளின் இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதுடன் பின்னர் நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், சுவிஸர்லாந்தில் இருந்து தான் வெளியேற்றப்படுவதை தவிர்க்க அவர் சமஷ்டி நீதிமன்றத்தின் ஊடாக முயற்சித்துள்ளார்.

இந்த நபர் சமூக உதவியை சார்ந்திருப்பதால், லுட்சேர்ன் மாநில அதிகாரிகள் தமது முடிவை நியாயப்படுத்தி வாதிட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு முதல் தனது மனைவியை பிரிந்து வாழும் இவர், பல ஆண்டுகளாக இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பிராங்குகளை சமூக உதவியாக பெற்றுள்ளார்.

இந்த விடயமானது வதிவிட அனுமதியை நீடிப்பதற்கு எதிரான சட்டப்பூர்வமான காரணங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகிறது.

எனினும் முறைப்பாட்டாளரான இலங்கையர் இதனை மறுத்துள்ளார், அதிகாரிகளின் முடிவு விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர் வாதத்தை முன்வைத்துள்ளார், வதிவிட அனுமதி மறுப்பதற்கு சமூக நல உதவியை பெறும் நபர் செய்யும் தவறுகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படுகிறது.

இந்த விடயத்தை கீழ் நீதிமன்றங்களும் சரியாக அணுகவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார், எனினும் இது சமஷ்டி நீதிமன்றம் நிராகரிக்கக் கூடிய ஒரு விமர்சனம் எனக் கூறப்படுகிறது.

ஏ.எச்.வி. ஓய்வூதியம் உட்பட மூன்றரை ஆண்டுகள் உதவி சலுகைகளை பெறுவார் எனவும் இதனால், நீண்டகாலம் சமூக உதவி தேவையில்லை என்ற வாதத்தை சமஷ்டி நீதிமன்றத்தால் நம்ப இயலவில்லை என சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறும் வயது வரையும் அதன் பின்னர் பல ஆண்டுகள் வரை சமூக உதவிகள் இன்றி இருக்க முடியாது என்பதை முறைப்பாட்டாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால், சுவிஸர்லாந்தில் வசிப்பதற்கான முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட ஆர்வமானது, லுட்சேர்ன் மாநில அதிகாரிகளின் முடிவை இரத்துச் செய்யும் அளவுக்கு வலுவாக இல்லை எனவும் சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் நீண்டகாலம் தங்கி இருப்பதற்கு அவருக்கு அவரது நான்கு பிள்ளைகளின் உறவை தவிர ஆதரவான வேறு எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீதிபதிகள் பிராந்திய சட்ட திணைக்களத்தின் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்வதுடன் அதற்கு அமைய சமூக - கலாசார மட்டத்தில் ஒருங்கிணைக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

மேலும் அவரது சகாக்கள் மற்றும் தமிழ் சமூகம் அவருடன் சம்பந்தப்பட்டு, அதிகாரிகளின் முடிவுகளை மாற்றுவதற்கான எவ்வித முனைப்புகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் தனது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக கவனத்தில் கொண்ட நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் இலங்கைக்குள் தொழில் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமம் என்பது தெளிவானது.

எனினும் அவர் சுவிஸர்லாந்தில் தங்கிய பின்னரும் தீர்மானகரமான காரியங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை.

வெளிநாட்டு பொலிஸாரின் இரண்டு எச்சரிக்கைகள் இருந்த நிலையிலும் 15 ஆண்டுகளுக்கு மேலான காலம் அவரால் தொழில் ரீதியான முனைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.
Previous Post Next Post